Latestமலேசியா

மஞ்சோங்கில் குடிநுழைவுத் துறை அதிரடி; 17 கள்ளக்குடியேறிகள் கைது

ஈப்போ, நவம்பர்-29, பேராக் மஞ்சோங்கில் 6 வெவ்வேறு தளங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில் 17 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.

நவம்பர் 22-ல் Ops Selera, Ops Dandan, Ops என்ற பெயர்களில் அந்த அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

பொது மக்கள் செய்த புகாரை அடுத்து 27 பேர் கொண்ட குழு அச்சோதனைகளில் இறங்கியது.

கைதானவர்கள், 18 முதல் 49 வயதிலான 8 ஆண்களும் 9 பெண்களும் ஆவர்.

மேல் விசாரணைக்காக ஈப்போ குடிநுழைவுத் தடுப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!