Latestமலேசியா

மடானி அரசின் ‘சுத்தமான’ நிர்வாகமே ரிங்கிட் வலுப்பெற முக்கிய காரணம் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப்ரவரி 5 – சமீப காலமாக மலேசிய ரிங்கிட் வலுப்பெறுவதற்கு, மடானி அரசின் சுத்தமான மற்றும் ஒழுங்கான நிர்வாகமே முக்கிய காரணம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரசின் செயல்திறன் மீது முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை அதிகரிப்பே ரிங்கிட் மதிப்பு உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். நாட்டின் மொத்த பொருளாதாரம் தற்போது நிலையான பாதையில் செல்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 4.9 விழுக்காடு வளர்ச்சி அடையும் அதே நேரத்தில் பணவீக்கம் 1.6 விழுக்காட்டில் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார். இவை அனைத்தும் ஊக்கமளிக்கும் பொருளாதார அறிகுறிகள் என அவர் கூறினார்.

இந்த முன்னேற்றம் தற்செயலானது அல்ல என்றும், அரசு நிதிகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பது, நிறுவனங்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவது மற்றும் அதிகாரப் பயன்படுத்தலில் நேர்மையைக் கடைபிடிப்பது போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இது நிகழ்ந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!