
புத்ராஜெயா, ஏப்ரல்-9-‘மடானி மார்ட்’ பல்பொருள் விற்பனை மையத் திட்டம் சிறு விற்பனையாளர்களை புறக்கணிக்காது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இத்திட்டம் போட்டியாக அல்லாமல், உள்ளூர் கடைகளுக்கு ஆதரவாக செயல்படும் என, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN கூறியது.
” ‘மடானி மார்ட்’ கடைகள் அரசாங்கத்தால் நேரடியாக நடத்தப்படுவதில்லை. மாறாக, தனியார் தொழில்முனைவோருக்கு உரிமம் வழங்கப்படும் முறை இதில் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, இந்த அணுகுமுறை மூலம், சிறு வணிகர்கள் தங்கள் கடைகளை மேம்படுத்திக் கொள்ளவும், மலிவான விலையில் பொருட்களை பெறவும் வாய்ப்பு கிடைக்கும்” என துணையமைச்சர் டத்தோ Dr Fuziah Salleh தெளிவுப்படுத்தினார்.
இத்திட்டம் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க, அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பிலுள்ள சிறு விற்பனையாளர்களும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என்றார் அவர்.
கடந்த வாரம் பிரதமர் தொடக்கி வைத்த இந்த ‘மடானி மார்ட்’ கடைகள் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு, ஈராண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.



