Latestமலேசியா

மனித நாகரீகமற்ற பயங்கரவாதத்துக்கு சமூகத்தில் இடமில்லை; காஷ்மீர் தாக்குதலைக் கண்டித்தார் பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, ஏப்ரல்-25, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலை, மலேசியா கடுமையாகக் கண்டித்துள்ளது.

இது ஒரு திட்டமிடப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

அதுவும், உயிரிழந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இது நாகரீக சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத கொடூரமாகும் என அவர் சொன்னார்.

அத்தாக்குதலில் சொந்தங்களைப் பறிகொடுத்தவர்களுக்கு மலேசியா சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் சொன்னார்.

பிரிவினையைத் தூண்டும் பயங்கரவாதத்தை நாம் இப்படியே விட்டு விட முடியாது.

எனவே, இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்துலகச் சமூகம் இந்தியாவுக்குத் துணை நிற்க வேண்டுமென்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, காஷ்மீரில் சுற்றுப் பயணிகளைள் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டு, 17 பேர் காயமடைந்தனர்.

உலகையே உலுக்கிய அத்தாக்குதலுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சிப் படையான TRF பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!