செபராங் பிறைய், செப்டம்பர் 6 – செபராங் பிறையில், வெளிநாட்டவர் ஒருவர் வாகனத்தின் சீட் பெல்ட்டால் சுயமாகவே கழுத்தையும் உடலையும் நெரித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால், மனஅழுத்தத்தை எதிர்நோக்கியதே இந்த தற்கொலைக்குக் காரணம் என செபராங் பிறை வடக்கு மாவட்ட காவல்துறை உதவி கமிஷனர் அனுவார் அப்துல் ரஹ்மான் (Anuar Abd Rahman) தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில், Perodua Axia-வில் அந்த 19 வயது இளைஞரின் கழுத்து மற்றும் உடல், பின் சீட் பெல்டில் சிக்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இறந்த ஆடவர் அடிக்கடி மனைவியுடன் தொலைப்பேசியில் சண்டபோடுவதை அவரது சக ஊழியர்கள் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, கடந்த மூன்று நாட்களுக்கு முன்தான் கோலாலம்பூரிலிருந்து வந்த அந்த ஆடவர் வாகனம் கழுவும் இடத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார்.