Latestஉலகம்

மன்னர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது; பிரிட்டனில் அதிர்ச்சி

லண்டன், பிப்ரவரி-20-பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் சகோதரர் – முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பிரிட்டன் வரலாற்றில் போலீஸாரால் கைதுச் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

பொதுவெளியில் தவறான நடத்தை என்ற குற்றச்சாட்டின் பேரில், சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில், 66 வயதான ஒருவரை கைது செய்ததை போலீஸ் உறுதிச் செய்தது.

அவரது பெயரை சட்ட காரணங்களால் போலீஸ் வெளியிடவில்லை என்றாலும், அவர் அண்ட்ரூ தான் என பிரிட்டன் ஊடகங்கள் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஆண்ட்ரூ, பெரும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டெய்னுடன் 2010-ஆம் ஆண்டு இரகசிய வர்த்தக ஆவணங்களை பகிர்ந்தாரா என்ற விசாரணை நடைபெறுவகிறது.

ஏற்கனவே, எப்ஸ்டெய்னுடன் இருந்த தொடர்புகள் காரணமாக, 2025-ல் ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை இழந்திருந்தார்.

நடந்தவை குறித்து “ஆழ்ந்த கவலை” தெரிவித்த மன்னர் சார்ல்ஸ், “சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்” என்றார்.

விரிவான, நியாயமான விசாரணைக்கு அரச குடும்பம் முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, இக்கைது குறித்து கருத்துரைத்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை” என வலியுறுத்தி, சாட்சிகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த கைது, நீண்டகால சர்ச்சையை மீண்டும் தீவிரப்படுத்தி, பிரிட்டன் அரச குடும்பம் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!