
லண்டன், மார்ச் 28 – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையால் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு குறுகிய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்.
பெர்மிங்ஹாமில் வேலைப் பயணத்தை ரத்துச் செய்துவிட்டு ஓய்வுக்காக அவர் கிளாரான்ஸ் ஹவுஸ்சிற்கு ( Clarence House ) திரும்பியுள்ளார். இந்த நிலை அவர் குணமடைவதில் சிறு தடையாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து வாரந்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏப்ரல் மாதம் பணிக்குத் திரும்பிய போதிலும், மருத்துவ ஆலோசனையின் பேரில் அவரது அதிகாரப்பூர்வ அட்டவணை இப்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் தூதர்களுடன் மன்னர் சார்லஸின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.