Latestமலேசியா

மரம் மேலே சாய்ந்ததில் எஸ்.பி.எம் மாணவிக்கு முதுகு எலும்பு, கால் முறிவு

கோலாலம்பூர், அக்டோபர்-12,

கோலாலம்பூர், தாமான் டேசாவில் கனமழையின் போது மரம் சாய்ந்து மேலே விழுந்ததில், 5-ஆம் படிவ மாணவி படுகாயமடைந்தார்.

17 வயது Tan Sze Hui அக்டோபர் 6-ஆம் தேதி தனது 4 தோழிகளுடன் பள்ளி முடிந்து திரும்பும் வழியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

Daman Danau Desa-வில் உள்ள டியூஷன் வகுப்புக்கு அந்த ஐவரும் நடந்துசெல்லும் போது, பலத்த காற்றில் மரம் சாய்ந்து மகள் மேல் விழுந்ததாக, மாணவியின் தாயார் கூறினார்.

Sze Hui-க்கு spinal cord எனப்படும் முள்ளந்தண்டு வடத்தில் காயமேற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

மேலும் இரு கால்களும் முறிந்துள்ளதால் பிளேட் வைக்க வேண்டியுள்ளதாகவும் அவரின் தாய் சோகத்துடன் கூறினார்.

Sze Hui, சன்வே மருத்துவ மையத்தில் தீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதர நால்வருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!