பேங்கோக், செப்டம்பர் 24 – பேங்கோக்கில், தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் கூடுதல் மருத்துவ விடுப்பைக் கோரியுள்ள நிலையில், அதனை முதலாளி நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்கு வந்த 20 நிமிடத்தில் சரிந்து விழுந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் ஊழியர் மரணமடைந்து விட்டார் என்பதை மருத்துவமனை உறுதி செய்துள்ளது.
முன்னதாக பெருங்குடல் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக, கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை விடுப்பு எடுத்துஇருக்கிறார், அந்த பெண் ஊழியர்.
நான்கு நாட்களுக்கு மருத்துவமனையிலிருந்தும், தொடர்ந்து உடல் நிலை மோசமடையவே, இரண்டு நாள் கூடுதலாக மருத்துவர் விடுப்பு வைத்திருந்து விடுமுறை கோரியுள்ளார்.
இந்நிலையில் அது நிராகரிக்கப்பட்டவே, அவர் வேலைக்கு வந்து மயங்கி விழுந்திருக்கிறார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் மரணமடைந்தார் என்பதை அந்த பெண்ணின் சக ஊழியர் ஒருவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவ விடுப்பு வழங்கியும் அவரின் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை என்பதை குறித்து தற்போது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் வலுவாக எழுந்து வருகின்றன.