Latestமலேசியா

மலாக்காவில் சாலை விபத்து; ஸ்போர்ட்ஸ் காரும் பேருந்தும் மோதியதில் ஒருவர் பலி

மலாக்கா, நவம்பர் 17 – இன்று காலை, மலாக்கா ஜாலான் கிருபோங் சுங்கை பாடாவ் (Jalan Krubong–Sungai Badau) பகுதியில், ‘sports’ காரும் பேருந்தும் மோதியதில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே ஆறு பேர் கொண்ட தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதென்று செங் (Cheng) தீயணைப்பு நிலையத்தின் இயக்குநர், முகமட் நொர்சியா செல்லா (Mohd Norsyah Salleh) கூறினார்.

மேலும் இவ்விபத்தில், கார் ஓட்டுநரான 26 வயது பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 34 வயதான பஸ் டிரைவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவர் மலாக்கா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் உடல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர், மீட்பு பணிகள் முடிவுற்றது என அறிவிக்கப்பட்டது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!