
மலாக்கா, அக்டோபர்-13 – மலாக்காவில் மூன்றாம் படிவ மாணவியை வகுப்பறையில் கற்பழித்த சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்ட 4 சீனியர் மாணவர்களும், நவம்பர் 3 SPM தேர்வில் அமர நிச்சயம் அனுமதிக்கப்படுவர்.
கடுமையானக் குற்றத்திற்காக கைதாகியிருந்தாலும், கல்வியில் அவர்கள் விடுபட்டு விடக் கூடாது என, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
அந்நால்வரில் இருவர் 15 வயது மாணவியைக் கற்பழித்ததாகவும், மேலுமிருவர் அதனை கைப்பேசியில் வீடியோவாக பதிவுச் செய்ததாகவும் நம்பப்படுகிறது.
நால்வரும் விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.