Latestமலேசியா

மலேசியரான Intel CEO உடனடியாக பதவி விலக அதிபர் ட்ரம்ப் வற்புறுத்தல்

வாஷிங்டன், ஆகஸ்ட்-8 – கணினி சில்லுகளைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான Intel-லின் தலைமை செயலதிகாரியான மலேசியாவின் Lip-Bu Tan உடனடியாகப் பதவி விலக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வற்புறுத்தியுள்ளார்.

அவருக்கு சீன நாட்டு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஒருவர் பீதியைக் கிளப்பியதே அதற்குக் காரணம்.

Lip-Bu Tan மற்றும் சீன நிறுவனங்கள் இடையே நிலவும் ‘நல்லுறவை’ கேள்வி எழுப்பி Intel நிறுவனத்துக்கு செனட்டர் Tom Cotton கடிதம் அனுப்பிய மறுநாள், ட்ரம்ப் அவ்வாறு வற்புறுத்தியுள்ளார்.

அவர் பதவி விலகுவதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லையென, தனது சமூக ஊடகமான Truth Social-லில் ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.

Lip-Bu Tan ஏராளமான சீன நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், சீனாவில் சில்லு தயாரிக்கும் நூற்றுக்கணக்காக நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவற்றில் குறைந்தது 8 நிறுவனங்கள் ‘சீன மக்களின் விடுதலைக்கான இராணுவம்’ என்ற அமைப்புடன் தொடர்புடையவை.

அதே சமயம், சீனாவில் உள்ள இராணுவப் பல்கலைக்கழகமொன்றுக்கு சட்டவிரோதமாக பொருட்களை விற்றதோடு, ஒரு semiconductor நிறுவனத்துக்கு அனுமதியில்லாமல் தொழில்நுட்பங்களை ‘தாரை வார்த்ததாகக்’ கூறப்படும் Cadence Design Systems என்ற நிறுவனத்திலும் Tan பங்கு வகித்துள்ளார்.

அப்போது அவர் அந்நிறுவனத்தின் தலைவர் என செனட்டர் Cotton சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஜோகூர், மூவாரில் பிறந்து வளர்ந்து, கணினி தொழில்நுட்ப உலகின் வல்லுநராக உருவெடுத்த Tan, கடந்த மார்ச் மாதம் தான் Intel-லில் பொறுப்பேற்றார்.

சரிவிலிருக்கும் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் பெரும் பணிக்காக, 66 வயதில் அவருக்கு 1 மில்லியன் டாலர் சம்பளம் பேசப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!