
கோலாலாம்பூர், ஜூன்-24- கடந்த மாதம் 1.2 விழுக்காடு பணவீக்க விகிதத்தை மலேசியா பதிவுச் செய்துள்ளது.
இது 51 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விகிதமாகும்.
மே மாதம் பயனீட்டாளர் விலைக் குறியீடு 134.4 ஆகப் பதிவானது; இதுவே ஓராண்டுக்கு முன் அது 132.8 -டாக இருந்தது என மலேசியப் புள்ளிவிவரத் துறையான DOSM தெரிவித்துள்ளது.
திறந்த பொருளாதார நாடாக மலேசியா பதிவுச் செய்துள்ள குறைந்த பணவீக்கப் போக்கு, கடந்த மாதம் மெதுவான அதிகரிப்பைப் பதிவுச் செய்த குறிப்பிட்ட சில நாடுகளுக்கான பணவீக்கத்துடன் ஒத்துப்போகிறது.
உலக எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவுக்கு ஏற்ப, ஐரோப்பிய மண்டல நாடுகள் 1.9 விழுக்காடாகவும், தென் கொரியா 1.9 விழுக்காடாகவும் இந்தோனேசியா 1.6 விழுக்காடாகவும் பிலிப்பைன்ஸ் 1.3 விழுக்காடாகவும் பணவீக்க விகிதத்தைப் பதிவுச் செய்தன.
கச்சா பெட்ரோலியம் பிரித்தெடுத்தலில் ஏற்பட்ட சரிவு காரணமாக, -17.8 விழுக்காட்டில் இந்த பணவீக்க சரிவுக்கு சுரங்கத் துறை முக்கியக் காரணமாக உள்ளது.
இதற்கிடையில், மொத்த பயனீட்டாளர் விலைக் குறியீட்டுக்கு 29.8 விழுக்காட்டைப் பங்களிக்கும் உணவு மற்றும் பானக் குழு மே மாதம் 2.1 விழுக்காடு மெதுவாக அதிகரித்தது.
அதே சமயம் நீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள் போன்றவை அடங்கிய குழுவுக்கான பணவீக்க விகிதம் ஏப்ரலை விட சற்று குறைவாக மே மாதம் 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக DOSM அறிக்கைத் தெரிவிக்கிறது.