Latestமலேசியா

மலேசியாவில் TikTok செயலியை முடக்கப்படவுள்ளனரா? போலி பதிவை விசாரிக்கும் MCMC

புத்ராஜெயா, டிசம்பர் 30 – அண்மையில் சமூக ஊடகங்களில் TV3-வின் சின்னத்தைப் பயன்படுத்தி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய அமைச்சர் Fahmi Fadzil,TikTok மலேசியாவை மூட உத்தரவிட்டார் என்று கூறிய போலி செய்தி ஒன்று பரவியுள்ளது.

இந்த தகவல் உண்மையல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வைரலாகிய அந்த உள்ளடக்கம், மாற்றி தயார் செய்யப்பட்ட போலி பதிவு என்றும் அமைச்சர் இதுபோன்ற அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் TV3 நிறுவனமும் தாங்கள் எந்த தளத்திலும் இத்தகைய செய்தியை வெளியிடவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்துள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரை விசாரணைக்கு அழைத்து, அவரது கைபேசி மற்றும் SIM அட்டையை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்

மக்கள் சமூக ஊடகங்களில் எந்த தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும், போலியான தகவல் பரவச் செய்வது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் MCMC எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!