
கோத்தா பாரு, மார்ச் 28 – நோன்பு பெருநாளை முன்னிட்டு Shawal முதல் நாள் மலேசியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான் பெர்ரி மற்றும் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். இந்த சேவைகள் ஏப்ரல் 1ஆம் தேதி செவ்வாய்க்கிமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வழக்கம்போல் தொடரும் என கிளந்தான் குடிநுழைவுத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் Rantau Panjang குடிநுழைவு, சுங்க, சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் மைய வளாகம் மற்றும் புக்கிட் பூங்காவிலுள்ள குடிநுழைவு, சுங்க மற்றும் தனிமைப்படுத்தும் வளாகத்தின் மாற்று வழியை பயன்படுத்தும்படி குடிநுழைவுத்துறை கேட்டுக்கொண்டது