Latestமலேசியா

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2023ஆம் ஆண்டிற்கான ஊடக விருது விழா

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் ஊடகத்திற்கும் இடையேயான நல்லுறவு, தகவல்களைக் கையாண்டு திறமையான தகவல் தொடர்புக் குழுவை உருவாக்க உதவுகின்றது என SPRM, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விளம்பரங்கள் குறித்த செய்திகளை சரியாகவும் துல்லியமாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விளக்கங்களை மக்களுக்கு பரவலாகக் கொண்டு சேர்க்கும் ஊடகங்களுக்கு நன்றிகளை நேற்று முன்தினம் Hotel Impiana KLCC-யில் நடைபெற்ற ஊடக விருது விழாவில் அவர் தெரிவித்துக் கொண்டார்.

தற்போது ஊழல் குற்றங்களில் ஈடுபடுவோர், சட்டங்களின் பலவீனங்களை அறிந்து தந்திரமாகவும் அறிவாளியாகவும் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இந்த ஊழலை எதிர்த்துப் போராடும் பணியில் ஊழல் தடுப்பு ஆணையம் மிகவும் சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்குகிறது.

அதலால்தான், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இது போன்ற ஊழல் தொடர்பான செய்திகளை நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் உட்பட சமூகத்தின் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதிசெய்ய ஊடகங்களை நம்பியுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே நேற்று முன் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருது விழா அனைத்து இலக்கவியல் ஊடகங்களையும் அச்சு ஊடகங்களையும் வருடத்திற்கு ஒரு முறை பார்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2023ஆம் ஆண்டிற்கான ஊடக விருதில் ஆறு ஊடகங்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தமாக RM24,000 ரிங்கிட் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!