
கோலாலம்பூர், மார்ச் 24 – தேசிய மிருக காட்சி சாலையில் உள்ள இரண்டு ராட்சத பாண்டாக்களான Fu Wa மற்றும் Feng Yi ஆகிய வெள்ளை கரடிகள் மீதான உடன்பாடு சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருங்கிய நட்பின் அடையாளமாக அந்த பாண்டா கரடிகள் உள்ளன என்று அவர் கூறினார்.
பாண்டாக்கள் தொடர்பாக நாங்கள் உடன்பாட்டை நீட்டித்துள்ளோம் . அவை Zoo நெகாராவிலுள்ள உள்ள மிருகக்காட்சி சாலைக்கு பல பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
அதனால்தான் அரசாங்கம் அவற்றை அங்கேயே வைத்திருப்பதை ஆதரிக்கிறது என்று அவர் இன்று கான்கார்ட் கிளப் (Concorde Club) கூட்டத்தில் கூறினார்.
கான்கார்ட் கிளப் என்பது அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் , ஊடக ஆசிரியர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் ஆகியோர் அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல் கூட்டமாகும்.
பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வாய் (Datuk Seri Wong Chun Wai) தலைமையிலான கான்கார்ட் கிளப்பின் முந்தைய விருந்தினர்களில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களும் அடங்குவர்.
இந்த உடன்பாடு ஏற்கனவே உள்ள வெள்ளை கரடிகளுக்கானதா அல்லது புதியவற்றுக்கானதா என்று கேட்டபோது, அது ஏற்கனவே உள்ள ஜோடிக்கானது என்று நிக் நஸ்மி கூறினார்.
புதிதாக குட்டியிடும் பாண்டாக்கள் சீனாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அந்த உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது.