
கோலாலம்பூர், டிசம்பர்-11 – கோலாலம்பூர், மவுண்ட் கியாரா அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உடல் கருகி மரணமடைந்துள்ளார்.
இரவு 8.30 மணியளவில் 26வது மாடியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கரும்புகையோடு தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள் வைரலாகியிருந்தன.
இதையடுத்து ஹர்த்தாமாஸ், செந்தூல், தித்திவாங்சா உள்ளிட்ட நிலையங்களிலிருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்தனர்.
தீ பெருமளவில் பரவியதால், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
கட்டுடத்தின் தீயணைப்பு கருவிகள் செயலிழந்திருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



