
அலோர் காஜா, செப்டம்பர் 3 – அலோர் காஜா தஞ்சோங் பிடாராவிலுள்ள இஸ்லாமிய சமய ஆசிரியர் ஒருவர், 12 வயது மாணவரை பிரம்பால் தாக்கி உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்படுத்திய வழக்கில் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் அடிக்கடி வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் ராணுவ வீரரான சிறுவனின் தந்தை தனது மகனின் உடலைச் சோதித்தபோது, முதுகு, தொடைகள், கைகள் மற்றும் கால்களில் பழைய மற்றும் புதிய காயங்கள் இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளார்.
சிறுவன் அளித்த தகவலின்படி, பல்வேறு காரணங்களுக்காகவும், தவறுகளுக்காகவும் அந்த ஆசிரியர் அடிக்கடி பிரம்பால் தாக்கியது தெரியவந்தது.
சந்தேக நபர் மாணவனை பிரம்பால் அடித்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து .மாணவனை கட்டுப்படுத்த முடியாததால் அவ்வாறு செய்ய நேரிட்டதாக அந்த ஆசிரியர் கூறியிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேல் விசாரணை நடைபெற்று வருவதாக அலோர் காஜா மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்ருல் முகமட் (Superintendan Azrul Mohamed) தெரிவித்தார்.