Latest

மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய AIMST பல்கலைக்கழகத்தின் 3 நாள் Pre-Foundation Programme

பாலிங்,ஏப்ரல் 11 – AIMST பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் Pre-Foundation Programme நடத்தப்பட்டது.

மூன்று நாட்கள், இரண்டு இரவுகள் என SPM தேர்வை முடித்த 122 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாழ்க்கையை முன்னோட்டமாக உணர்த்தும் விதமாக இத்திட்டம் திட்டமிடப்பட்டது.

மேற்கல்விக்காக எந்த துறையை தேர்வு செய்வது, கல்விக் கற்றல் எப்படி இருக்கும் என பல குழப்பங்களில் மாணவர்கள் இருந்த நிலையில், அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் வகையிலே இந்த சிறப்பு 3 நாள் சந்திப்பு அமைந்தது.

Science , engineering, business என 3 பிரிவுகளில் வழங்கப்படும் foundation கல்வி வாய்ப்பு, அதன் பின்னர் டிப்ளோமா மறரும் டிகிரி மேற்கல்வியைத் தொடர வழங்கப்படும் மொத்தம் 20க்கும் மேற்பட்ட துறைகளில் அவர்கள் எந்த துறைக்குச் செல்லலாம் என்ற விவரங்களோடு குறைந்த கட்டணத்தில் மேற்கல்வி வாய்ப்பை வழங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றின் விளக்கங்களும் வழங்கப்பட்டன.

அதே சமயம் ஒவ்வொரு facilityக்கும் மாணவர்கள் அனைத்து செல்லப்பட்டு அங்குள்ள கைமுறை பயிற்சிகள், கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள், சுவாரஸ்யமான மாணவர் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவையும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

அதோடு Scholarshipக்கு எப்படி விண்ணப்பிப்பதற்கான வழிக்காட்டுதலும் வழங்கப்பட்டது.

இதனிடையே மாணவர்களுக்கான உன்னத பல்கலைக்கழக அனுபவம் மற்றும் கல்வி திட்டம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள AIMST பல்கலைக்கழகம் வழங்கிய இந்த வாய்ப்பு அமைந்ததாக கலந்துக் கொண்ட மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்த 3 நாள் பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவர்கள், தொடர்ந்து ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திலேயே மேற்கல்வியைத் தொடர விருப்பம் தெரிவித்தவர்கள், எதிர்வரும் ஜூன் மாதம் தங்களில் கல்வியைத் தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வமுள்ளவர்கள் ஜூன் மாத மாணவர் சேர்க்கையில் கல்விப் பயில உடனே அழையுங்கள்!

நிதிச்சுமை இன்றி மேற்கல்வியை தொடர நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் அது AIMST பல்கலைக்கழகம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!