
கோலாலம்பூர் , அக்டோபர்- 15,
Bandar Utama Damansara இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 14 வயது மாணவனை ஏழு நாட்கள் தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.போலீஸ் துறையினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷாரில் அனுவார் அகமட் முஸ்தபா ( Shahril Anuar Ahmad Mustapha ) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிப்பதற்காக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை சந்தேகப் பேர்வழியை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
நேற்று காலை 9.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், SMK Bandar Utama Damansaraவில் மூன்றாம் படிவ மாணவியை அப்பள்ளியைச் சேர்ந்த மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த சந்தேக நபர் கூர்மையான கத்தியையும் பள்ளிக்கு கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.