
கோலாலம்பூர், டிச 3 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக நலத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற மனுச் செய்யலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார். திடீர் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்று தவறான புரிதல் இருக்கிறது. இந்த திடீர் வெள்ளம் குறித்து, சேதம் கண்டறியப்பட்டால், அது கால்நடைகள் அல்லது வீட்டில் உள்ள பிற வசதிகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக சமூக நலத்துறை இதர அரசு இயந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க உண்மையில் இடம் உள்ளது என அன்வார் சுட்டிக்காட்டினார். இழப்பீடுகளை அரசாங்கம் பரிசீலிக்கும், ஆனால் அதை அவசரப்படுத்த முடியாது, ஏனெனில் அது செயல்முறை மற்றும் பதிவுகளை பின்பற்ற வேண்டும் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அன்வார் தெரிவித்தார்.