
ஈப்போ, டிசம்பர் 26-சிம்பாங் பூலாய் – கேமரன் மலை சாலையோரத்தில் உள்ள ஒரு பிரபல உணவகம், நிலச்சரிவு அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
அண்மைய வாரங்களில் ஏற்பட்ட தொடர் மழை, மண் நகர்வு மற்றும் கடும் சரிவுகள் காரணமாக அப்பகுதி பாதுகாப்பற்றதாக இருக்கிறது.
எனவே, பொது மக்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உணவகத்தை மூட, பொதுப் பணித்துறையும் காட்டு இலாகாவும் பரிந்துரை செய்துள்ளன.
பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை உணவகம் மூடப்பட்டிருக்கும்.
இவ்வேளையில், இந்த மழைக்காலத்தில் கேமரன் மலை செல்லும் பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.



