Latestமலேசியா

முடிவில்லா இந்திரா காந்தியின் தேடல்; 17 வருடமாக தேடப்பட்டு வரும் முன்னாள் கணவன் EPF பணத்தை மீட்டது எப்படி? – வழக்கறிஞர் கேள்வி

ஈப்போ, ஏப்ரல் 6 – கடந்த 17 வருடங்களாக தனது மகள் பிரசானா டிக்சாவை தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் தேடல் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

2009ஆம் ஆண்டு முன்னாள் கணவன் முகமட் ரிடுவானால் அக்குழந்தை கொண்டுச் செல்லப்பட்டது. அன்று முதல் இன்றுவரை தனது மகளை மீட்க
இந்திரா காந்தி காவல்துறை, நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்திடம் பலமுறை முறையீடு செய்ததோடு பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கு இன்று காலை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணக்கு வந்தபோது இன்னமும் போலீசாரால் தேட்பட்டு வரும் அவரது முன்னாள் கணவர் முகம்மது ரிடுவானை கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து பல நடவடிக்கைகைளை எடுத்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறியது இந்திரா காந்திக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தேடப்பட்டு வரும் முகமட் ரிடுவான் எப்படி EPF பணத்தை மீட்டார், எப்படி அதை EPF அனுமதித்தது, இதை ஏன் போலிஸ் கண்டறியவில்லை என இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ராஜேஸ் கேள்வி எழுப்பிள்ளார்.

இன்னும் 2 நாட்களில் பிரசன்னா டிக்சாவிற்கு 18 வயது ஆகவுள்ள நிலையில், இவ்வளவு போராட்டதிற்குப் பிறகும் இன்னும் தீர்வு காணப்படாத இந்த வழக்கு இதற்கு மேல் வேறொரு பரிணாமம் காணும். எனவே காத்திருங்கள் என சமூக ஆர்வளர் அருண் துரைசாமி எச்சரித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்த வழக்கு மக்களின் கவனத்தைப்
பெற்றுள்ள நிலையில், ஒரு தாயின் தேடலுக்கு எப்போது கிடைக்கும் நீதி என வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!