
சென்னை, மே-5- படப்பிடிப்புகளுக்கு எப்போதும் தாமதமாக வருவதாக திரையுலகில் சிறு கரும்புள்ளியுடன் வலம் வரும் நடிகர் சிம்பு, அதற்கு விளக்கம் கூறப் போய் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகர் கமலஹாசனுடன் சிம்பு நடித்துள்ள Thug Life படத்தின் விளம்பர நிகழ்வில் அவர் பேசியதுதான் தற்போது பேச்சுப் பொருளாகியுள்ளது.
‘முதலில் இயக்குநர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வர வேண்டும்; வந்து சரியான நேரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும்; அதை விடுத்து வந்த இடத்தில் இதை மாற்றலாமா அதை மாற்றலாமா என யோசிக்கக் கூடாது; இதனால் மற்றவர்களுக்கும் நேரம் வீணாகிறது” என சிம்பு கூறியுள்ளார்.
இதனிடையே இயக்குனர் மணிரத்னத்தை கண்டால் மட்டும் பயமோ என சிலர் கூறுவதையும் அவர் மறுத்துப் பேசினார்.
“மணிரத்னம் யாருடைய நேரத்தையும் வீணடிக்க மாட்டார்; அவர் போன்று எனக்கு இயக்குநர்கள் கிடைத்திருந்தால் நான் இன்னும் நிறையப் படங்களில் நடித்திருப்பேன்; என் இரசிகர்களும் சந்தோஷமடைந்திருப்பார்கள்” என சிம்பு கூறினார்.
அவரின் இப்பேச்சு இயக்குநர்கள் மீதான நேரடியான தாக்குதலா என சர்ச்சை எழுந்துள்ளது.