
கோலாலம்பூர், மார்ச் 26-பசார் செனி எல்.ஆர். டி நிலையத்தில் உள்ள ரொட்டிக் கடையில் செவ்வாய்க்கிழமையன்று முதல் படிவ மாணவன் ஒருவனை அறைந்த சந்தேகத்திற்குரிய ஆடவனை போலீசார் அடையாளம் கண்டனர்.
நண்பகல் மணி 1.30 அளவில் நடந்த அந்த சம்பவம் சமுக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து வலைதளவாசிகளிடையே சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி ரகசிய கண்கணிப்பு கேமராவின் காணொளி பதிவை தற்போது ஆய்வு செய்யும் நடவவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சஷாலி அடாம் ( Sazalee Adam ) தெரிவித்தார்.
முன்னதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் திடீரென கன்னத்தில் அறையப்பட்டதில் 13 வயது சிறுவன் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அந்த நபரால் கன்னத்தில் அறையப்படுவதற்கு முன்பு, உணவு வாங்குவதற்காக ரொட்டிக் கடைக்கு சென்றதாக பர்ஹான் நசீர் முகமட் ஈசா என்ற அந்த பையன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
மதியம் சுமார் 1.35 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது, வரிசையில் யாரும் இல்லாததைக் கண்ட பர்ஹான், ரொட்டி வாங்குவதற்காக நேராக முப்பிட பணம் செலுத்தும் இடத்திற்கு சென்றபோது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் தனது முகத்தில் அறைந்ததாக தெரிவித்தான்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்
233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Sazalee Adam வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



