கெடா, ஜனவரி 21 – கெடாவில் முதன்முறையாக மாட்டுப் பொங்கல் விழாவை பெருமையுடன் கொண்டாடவிருக்கிறது என்ரிக்கோஸ் நிறுவனம்.
ஜனவரி 25ஆம் திகதி, சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 1 வரை பீடோங் , கெடாவில், FAMOX Plantation-யில் இந்த விழா நடைபெறவுள்ளது.
ஜல்லிக்கட்டு காட்சியகம், அதிரடியான மாட்டு வண்டி அனுபவம், உறியடி உட்பட பல பாரம்பரிய விளையாட்டுகளும் இதில் இடம்பெறவிருக்கின்றன.
நீங்களும் இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா?
இன்றே என்ரிக்கோஸ் வலைப்பக்கத்தில் அல்லது திரையில் காணும் எண்ணிற்கு அழைத்துப் பதிவு செய்யுங்கள்.
விவசாயத்தில் மாடுகளின் பங்கையும், அவற்றின் மகத்துவத்தையும் நினைவுகூரும் இந்த வரலாற்றுப்பூர்வமான விழாவில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்!