Latestமலேசியா

முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் தனது 76வது வயதில் இயற்கை எய்தினார்

முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் உடல்நலக் குறைவால் தனது 76வது வயதில் இன்று காலை இயற்கையை எய்தினார்.

2013 முதல் 2015 வரை இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக அவர் பதவி வகித்திருந்தார்.

கேமரன் மலை மற்றும் ஹுலு சிலாங்கூர் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த இறைநம்பிக்கையும் நேர்மையும் மிக்கத் தலைவராக அறியப்பட்டவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்.

அன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு வணக்கம் மலேசியா தனது ஆழ்ந்த இரங்கலை தெர்வித்துக் கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!