
புக்கிட் காந்தாங், அக்டோபர்-25 – பேராக், புக்கிட் காந்தாங்கில் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள முஸ்லீம் மையத்துக் கொல்லையையும் விட்டு வைக்கவில்லை.
Kuala Trong, Kampung Tok Johan முஸ்லீம் கல்லறையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் மிதந்தன.
சில சவப்பெட்டிகள் கல்லறைகளில் இருந்து பிய்த்துத்கொண்டன; குறிப்பாக ஒரு மாதத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட சில உடல்கள் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
பல கல்லறை பலகைகள் மற்றும் கல்லறைக் கற்கள் சேதமடைந்துள்ளதாக, புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal கூறினார்.
கல்லறைகளை மீண்டும் மூடுவதற்கு உபகரணங்களை வாடகைக்கு எடுக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமலிருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி பின்னர் கூடி பேசப்படும் என்றார் அவர்.
இந்ந அண்மைய திடீர் வெள்ளத்தால், புக்கிட் காந்தாங் தொகுதியையும் உட்படுத்திய லாருட்-மாத்தாங்-செலாமா மாவட்டத்தில் 645 குடும்பங்களைச் சேர்ந்த 1,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



