
மெக்சிக்கோ சிட்டி, அக் 13 –
மெக்சிக்கோவில் பல்வேறு மாநிலங்களில் புயலுடன் கூடிய கடுமையான மழையினால் 44 பேர் மரணம் அடைந்ததோடு அதிகமானோர் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பனிகட்டிகள் இடிந்தது மற்றும் நீர் மட்டம் உயர்ந்ததால் குறிப்பாக மலைப்பகுதிகளில் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்புகளை இழந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் சென்றடைவதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.பெரிடருக்கு உள்ளான பகுதிகளை மதிப்பீடு செய்வதற்காக மெக்சிக்கோ அதிபர் கிளவ்டியா ஷெய்ன்பவ்ம் ( Claudia Sheinbaum ) ஞாயிற்றுக்கிழமை பேரிடர் பகுதிகளுக்கு வருகை புரிந்தார்.
Puebla மாநிலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களை பார்வையிட்ட அதிபர் மீட்புக் குழுவினரையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார்.
இன்று வானிலை நன்றாக இருந்ததால் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்றதோடு ஒதுக்குப்புறமான பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்கு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிபர் கிளவ்டியா தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.