
கோலாலம்பூர், ஜூலை 16 – இன்று காலை மெக்ஸ் நெடுஞ்சாலையில் கோலாலம்பூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று 90 சதவீதம் தீயில் எரிந்து நாசமானது.
இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறியுள்ளார்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிறிது நேரத்திலேயே தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்புப் படையினர்கள் வருவதற்கு முன்பாகவே, பேருந்திலிருந்த 12 பயணிகளும் வேறொரு பேருந்திற்கு மாற்றப்பட்டதால் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்றும் ஓட்டுனரும் ஆபத்திலிருந்து தப்பினார் என்றும் அறியப்படுகின்றது.