
கோலாலம்பூர், அக்டோபர்-14,
மெட்ரிகுலேஷன் திட்டத்தை அகற்ற வேண்டும் என்ற தனது கருத்து தொடர்பாக, UMANY எனப்படும் மலாயா பல்கலைக்கழக இளையோர் சங்கத் தலைவர் தாங் யி சே (Tang Yi Ze) மீது நடைபெறும் விசாரணையில், போலீஸ் இதுவரை 17 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவுச் செய்துள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அதனைத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மெட்ரிகுலேஷன் திட்டத்தை இரத்துச் செய்து, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு STPM மட்டுமே ஒரே நுழைவுத் தகுதியாக்கப்பட வேண்டும் என தாங் முன்வைத்த கருத்து முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செப்டம்பர் 23-ஆம் தேதி, அவ்விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட 14 போலீஸ் புகார்களைத் தொடர்ந்து தாங் முதலில் வாக்குமூலம் அளித்தார்.
அவ்விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கே சைஃபுடின் அவ்வாறு பதிலளித்தார்