
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 68-ஆவது மெர்டேக்கா கொண்டாட்டத்தை ஒட்டிய நீண்ட வார இறுதி விடுமுறையில், தனது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் வாகனங்களாக உயரும் என PLUS நிறுவனம் கணித்துள்ளது.
எனவே இன்று முதல் அடுத்த திங்கள் வரை சீரான பயணத்தை உறுதிச் செய்வதற்காக நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய தின விடுமுறை உட்பட, உச்ச நாட்களில் வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களை சிறப்பாகத் திட்டமிட உதவும் வகையில், PLUS அதன் பயன்பாட்டில் MyPLUS-TTA அம்சத்தை மேம்படுத்தியுள்ளது.
பண்டிகை காலங்களில் உச்ச பயண நாட்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவது போலல்லாமல், PLUS தொடர்ந்து போக்குவரத்தை கண்காணித்து, வாகனமோட்டிகளுக்கு மிகவும் பொருத்தமான பயணத் தகவல்களை வழங்க உச்ச கால ஆலோசனையைப் புதுப்பிக்கும்.
இந்நிலையில் PLUS App ( https://bit.ly/3pO2PYs) என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய அல்லது புதுப்பிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறிற்று.