Latestமலேசியா

மெல்பர்னில் நாடோடியால் குத்திக் கொல்லப்பட்ட மலேசிய மருந்தாளர்

மெல்பர்ன், அக்டோபர்-28, ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் மலேசிய மருந்தாளர் (pharmacist) Kum Chuan Leong, மெல்பர்ன் நகரிலுள்ள தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.

சுருக்கமாக KC என்றழைக்கப்படும் 29 வயது Chuang Leong கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்ததை, அவரின் நண்பர் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்தில் CCTV கேமராவை சோதனையிட்ட போலீசார், வீடற்றவரான 54 வயது சந்தேக நபரை கைதுச் செய்தனர்.

Schizophrenic எனப்படும் ஒரு வகை மனக்கோளாறால் பாதிக்கப்பட்ட Simon Hunter வியாழன்றே மெல்பர்ன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

வழக்கு ஜனவரி 16-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வரும் வரை அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் KC-யின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வியாழக்கிழமையே அவர்கள் மெல்பர்ன் பயணமாகினர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அங்குள்ள மலேசியப் பேராளரகம் வாயிலாக வெளியுறவு அமைச்சு வழங்கி வருகிறது.

பொது சுகாதார சேவை நிறுவனமொன்றில் 2021-லிருந்து KC பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!