Latestஅமெரிக்காஉலகம்

மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எண்ணெய் நிரப்பும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; அனைத்து ஊழியர்களும் பலி

இஸ்தான்புல், மார்ச் 13-மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ டேங்கர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் அதில் இருந்த அனைத்து ஊழியர்களும் கொல்லப்பட்டதாக ஈரான் கூறிக்கொண்டதாக துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏவுகனை தாக்குதலில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சி காவல் படையுடன் கூட்டு சேர்ந்துள்ள Khatam Al Anbiya ராணுவ தலைமையத்தின் பேச்சாளரை மேற்கோள் காட்டி ஈரான் தொலைக்காட்சி அறிவித்ததாக கூறப்பட்டது.

இதனிடையே போயிங் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் ( Stratotanker ) வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாகவும், அச்சம்பவத்தில் மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது என்று வாஷிங்டனில் ஏ.எப்.பி வெளியிட்ட அண்மைய அறிக்கையில் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து
காணாமல் போன நான்காவது அமெரிக்க இராணுவ விமானம் KC-135 ஆகும்.

நட்புரீதியான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குவைத் படைகளால் மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ( Strike Eagel ) போர் விமானங்கள் இதற்கு முன்னர் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டன.

60 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருக்கும் KC-135, பொதுவாக ஒரு விமானி, ஒரு துணை விமானி பிற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் அமைப்பை இயக்கும் ஊழியர் என மூவரை அந்த விமானம் கொண்டிருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!