
ஜகர்த்தா, நவ 7- இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள மராபி எரிமலை இன்று காலை காலை குமுறியதில் , 800 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் துகள்கள் காற்றில் கலந்ததாக எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. ஜகார்த்தா நேரப்படி காலை 8.54 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. எரிமலை பகுதியிலுள்ள கிழக்கு மற்றும் வடகிழக்கில் சாம்பல் பரவியது.
எரிமலை வெடித்த பகுதியிலிருந்து 4.5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எரிமலையின் சரிவுகளில் உருவாகும் எரிமலைக் குழம்புகள் கனமழையின்போது பாயக்கூடும் என்பதால் ஆற்றோரங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுறுசுறுப்பாக செயல்பட்டுவரும் 127 எரிமலைகளில் மராப்பியும் ஒன்றாகும். இது நில அதிர்வு செயலில் உள்ள பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.