
பிரான்ஸ், ஜூலை 31 – கடந்த புதன்கிழமை, பிரான்சில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் மறைந்த பாப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் ஒற்றை சாக்ஸ் 8,000 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகியுள்ளது.
1997 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியின் போது, மைக்கல் ஜாக்சனின் இந்த சாக்ஸ் அவரின் ஒப்பனை அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது என்று ஏல விற்பனையாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜாக்சன் பாடிய பிரபல பாடலான “பில்லி ஜீன்” பாடல் காணொளியில் அவர் அந்த வெள்ளை நிற சாக்ஸை அணிந்திருப்பதைக் நாம் காணலாம்.
இந்நிலையில் அவர் அணிந்திருந்த தொப்பி 2023 ஆம் ஆண்டில் பாரிஸில் 80,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவரது வாழ்நாளிலும் அவரது மரணத்திற்குப் பிறகும் அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவருக்கு இன்னும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது.