Latestமலேசியா

மைஸ்கில் அறவாரியம் மற்றும் ஜோகூர் இந்திய புத்தாக்க மையம் ஆதரவில் 3 நாள் முகாமில் 130 மாணவர்கள் பங்கேற்றனர்

ஜோகூர் பாரு, மார்ச்-30- மை ஸ்கீல் அறவாரியம் மற்றும் இந்தியர் புத்தாக்க மையம் ஆதரவில் ஜோகூர் Bukit Serampang Bukit Indah வில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கான மூன்று நாள் நாள் முகாமில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 130 மாணவர்கள், கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கல்வி, கட்டொழுங்கு மற்றும் வாழ்க்கை திறன்களில் பல முக்கியமான பயிற்சிகளை பெற்றனர்.மாணவர்களுக்கு , நேர்த்தி, குழு வேலை, மற்றும் தலைமைத்திறன் போன்ற பண்புகளும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இதுதவிர தன்முனைப்பு பேச்சுக்கள், கூடுதல் வகுப்புகள் மற்றும் விளையாட்டு செயல்பாடுகள் போன்ற நிகழ்வுகளிலும் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

இந்த மூன்று நாள் முகாமில் கலந்துகொண்ட மாணவர்களிடையே கணிசமான மாற்றமும் காணப்பட்டது. குறிப்பாக மாணவர்களின் நம்பிக்கை , தனிப்பட்ட நடவடிக்கை மற்றும் அவர்களது தொடர்பு,திறன்களிலும் முன்னேற்றம் காணப்பட்டது.

இந்த முகாமில் பெற்றோர் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது . அதே வேளையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தை அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!