
சிரம்பான், ஆகஸ்ட்-17- நெகிரி செம்பிலான் ரந்தாவில் வாகனப் பட்டறையொன்றில் பழுதுபார்ப்பின் போது டாங்கி லாரி வெடித்ததில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
நேற்று மதியம் நிகழ்ந்த அச்சம்பவவத்தில் பட்டறைப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். பழுதுபார்ப்பின் போது அவ்விருவரும் லாரியின் மேல் இருந்தனர்; அது திடீரென வெடித்த போது 3 மீட்டர் உயரத்திற்கு அவர்கள் தூக்கி வீசப்பட்டதாக சாட்சிகள் கூறினர்.
தீயணைப்பு – மீட்புத் துறை வந்து பார்த்த போது 33 வயது ஓட்டுநர் சுயநினைவின்றி விழுந்துகிடந்தார்.
அவர் இறந்தது உறுதிச் செய்யப்பட்டதும் சவப்பரிசோதனைக்காக உடல் ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
காயமடைந்த பணியாளர் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வெடிப்பு நிகழ்ந்த பட்டறை வளாகத்தில் தீயணைப்புத் துறை பரிசோதனை நடத்தியதில் அங்கு நிலைமைப் பாதுகாப்பாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.