
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – மலேசியா மோட்டோஜிபி ( MotoGP ) தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று Sepang அனைத்துலக பந்தய தடம் (SIC) தெளிவுபடுத்தியுள்ளது. எனவே பார்முலா ஒன் கிரின்பிரி கார் பந்தயப் போட்டி மீண்டும் Sepangகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. அண்மையில் மோட்டோஜிபி நிகழ்வின் போது, SIC தலைமை நிர்வாக அதிகாரி அஜான் ஷஃப்ரிமான் ஹனிப் ( Azhan Shafriman Hanif ) இதனை தெரிவித்தார்.
SIC யும் பங்குதாரர்களும் பார்முலா ஒன் மீண்டும் செப்பாங்கிற்கு வர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் பார்முலா ஒன் காலண்டரில் இடம் பெற அதிக ஏற்பாடு செலவுகள் மற்றும் நீண்ட காத்திருப்பு பட்டியலை அவர் சுட்டிக்காட்டினார். இது பொதுமக்களின் உற்சாகத்தையும், பார்முலா ஒன் போட்டியை மலேசியா மீண்டும் நடத்த வேண்டுமா என்ற விவாதத்தையும் தூண்டியதாக அவர் கூறினார்.