
பாகான் டத்தோ, ஜனவரி-26-தேசிய முன்னணியில் தனது எதிர்காலம் குறித்து தீர்மானிக்க ம.இ.கா உரிமைப் பெற்றுள்ளதாக, கூட்டணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
எதுவாக இருந்தாலும் அது அவர்களின் தேர்வு.
ஆனால், அம்னோ, ம.சீ.ச போல தேசிய முன்னணியின் அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் ம.இ.கா கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார் அவர்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து விரைவில் ம.இ.கா மத்திய செயலவை முடிவுச் செய்யும் என, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் முன்னதாகக் கூறியிருந்த நிலையில், சாஹிட் அவ்வாறு கருத்துரைத்தார்.
பெரிக்காத்தானில் இணையும் ம.இ.காவின் விண்ணப்பத்தை PN உச்சமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ம.இ.கா பாரிசானில் நீடிக்குமா அல்லது பெரிக்காத்தானில் சேருமா என்பது தைப்பூசத்திற்குப் பிறகு தெரிய வரும்.



