Latestஉலகம்

45 வயதில் உலகப் பட்டம் வென்ற குத்துச் சண்டை ஜாம்பவான் ஜோர்ஜ் ஃபோர்மன் 76-ஆவது வயதில் மரணம்

ஹுஸ்டன், மார்ச்-23 – 45 வயதில் தனது பட்டத்தை மீண்டும் பெறுவதற்காக களத்திற்குத் திரும்பியவரான ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஜோர்ஜ் ஃபோர்மன், வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா ஹூஸ்டனில் காலமானார்; அவருக்கு வயது 76.

மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்ததை குடும்பத்தார் உறுதிப்படுத்தினர்; ஆனால் காரணம் தெரிவிக்கப்படவில்லை.

குத்துச் சண்டை சகாப்தம் மொஹமட் அலியுடன் 1974-ஆம் ஆண்டு ‘rumble in the jungle’ என்ற சிறப்பு அடைமொழியுடன் அழைக்கப்பட்ட மாபெரும் குத்துச் சண்டையில் பங்கேற்றவரே இந்த ஜோர்ஜ் போர்மன் ஆவார்.

அப்போட்டியில் மொஹமட் அலியிடம் தோற்றவர் பெரும் ஏமாற்றத்தில், பாதிரியாராகும் நோக்கில் 1977-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

10 வருட இடைவெளிக்குப் பிறகு 143 கிலோ கிராம் எடையுடன் களத்திற்குத் திரும்பி வியக்க வைத்த
ஃபோர்மன், படிப்படியாக உடல் எடையைக் குறைத்து 24 தொடர் வெற்றிகளைக் குவித்தார்.

பின்னர் 1991-ஆண்டு அப்போதையை ஜாம்பவான் ஆன Evander Holyfield-டிடம் அவர் தோல்வியுற்றார்.

எனினும் மனம் தளராத ஃபோர்மன் மூன்றாண்டுகள் கழித்து, அதுவரை யாராலும் தோற்கடிக்கப்படாத மைக்கேல் மூரரை வீழ்த்தி 45 வயதில் உலகப் பட்டதைத் வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சாதிக்க வயதில்லை என உலகிற்கு நிரூபித்த ஃபோர்மன், தொழில்முறை குத்துச்சண்டையில் 76 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்து, 1997-ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!