Latestமலேசியா

கோத்தா திங்கியில் பாதி மட்டுமே மிஞ்சிய மாட்டின் உடல்: புலிக் கொன்றுத் தின்றதா என சந்தேகம்

கோத்தா திங்கி, ஜனவரி-13-ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள Felda Penggeli Timur பகுதி மக்கள், நேற்று காலை வெறும் பாதி உடல் மட்டுமே மிஞ்சிய நிலையில் ஒரு மாட்டின் சிதைந்த சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குடியிருப்புகளுக்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் அது கண்டெடுக்கப்பட்டது.

இது புலியின் தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மாட்டைத் தாக்கி புலி இழுத்துச் சென்ற தடயங்களும் காணப்படுகின்றன.

அண்மைய நாட்களாக இரவில் வனவிலங்கின் உறுமல் கேட்டதாகவும், புலி காலடிச் சுவடுகள் போல காணப்பட்டனவாம்.

இச்சம்பவம், கால்நடைகளை நம்பி வாழும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் கூறினர்.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காங்கள் துறையான PERHILITAN, சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், இரவில் தனியாக செல்ல வேண்டாம் என்றும், வனவிலங்குகளின் கால் சுவடுகள் இருந்தால் உடனடியாக புகார் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!