Latestமலேசியா

ரஃப்லேசியா மலரின் பெயரை மாற்ற முன்மொழிவு – மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 21- 68வது தேசிய தினத்தை முன்னிட்டு ரஃப்லேசியா (Rafflesia) மலரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாச்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் ஃபைசால் வான் அகமட் கமல் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal) பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இந்நிலையில், ஃபைசாலுக்கு பதிலளித்த இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத்துறையின் தற்காலிக அமைச்சர் ஜோஹாரி கானி, அவரின் அந்த முன்மொழிவைக் கவனத்தில் எடுத்ததாகவும், புதிய பெயர் பரிந்துரைக்க விரும்புவோர் அதை முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ரஃப்லேசியா என்ற பெயர் சிங்கப்பூரின் முதல் குடியிருப்பாளரான ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸின் நினைவாக வைக்கப்பட்டது என்றும் அதே வேளை அவர் ஒழுக்கக்கேடான, நெறிமுறையற்ற நபர் என்றும் குறிப்பிடப்பட்டது.

1818 ஆம் ஆண்டு சுமத்ரா மற்றும் போர்னியோ காடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி பயணத்தில் இந்த மலர் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த முயற்சிக்கு தலைமை தாங்கிய ராஃபிள்ஸின் நினைவாக அப்பெயர் வைக்கப்பட்டது.

மேலும் மலாய் மொழியில், இந்த மலர் “பக்மா மலர்” (Bunga Pakma) என அழைக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!