
புத்ராஜெயா, பிப்ரவரி-23-ரமலான் நோன்பு மாதத்தை ஒட்டி one off முறையில் 500 ரிங்கிட் உதவி நிதியை அரசாங்கம் வழங்குவதாகக் கூறப்படுவதை, நிதியமைச்சு மறுத்துள்ளது.
அப்படியோர் உதவி எதுவும் இல்லை என ஃபேஸ்புக் வாயிலாக கருவூலம் தெளிவுப்படுத்தியது.
எனவே, சந்தேகப்படும்படியான link இணைப்புகளைத் கிளிக் செய்ய வேண்டாம் என பொது மக்களை அது எச்சரித்தது.
அரசாங்க உதவி என்ற பெயரில் பொறுப்பற்ற தரப்பினர் மோசடி செய்யலாம் என்பதால், எதையும் நன்காராயாமல் தனிப்பட்ட தகவல்களை ப் பகிர வேண்டாம் என கருவூலம் கேட்டுக் கொண்டது.
அரசாங்க உதவிகள் குறித்து பொது மக்கள் நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களிலும் சரிபார்த்துகொள்ளலாம்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் படத்துடன் முன்னதாக வைரலான போஸ்டரில், ரமலானுக்காக RM500 ரொக்க உதவி மக்களின் வங்கிக் கணக்கில் போடப்படுவதாகவும், தகுதியை சரிபார்க்க link இணைப்பை கிளிக் செய்து தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



