
கோம்பாக், மார்ச்-1 – சிலாங்கூர் ரவாங்கில் நாய் குட்டியொன்று மடிந்து வைரலான சம்பவம், விசாரணைக்காக கோம்பாக் கால்நடை சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோம்பாக் போலீஸ் தலைவர் Noor Ariffin Mohamad Nasir அதனை உறுதிப்படுத்தினார்.
WhatsApp-பில் பார்த்த வைரல் வீடியோ குறித்து நேற்று காலை 53 வயது உள்ளூர் ஆடவர் புகார் செய்ததாக Noor Ariffin சொன்னார்.
எனினும் அந்த நாய் குட்டிக்கு எஜமானர் யாருமில்லை என்பது போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
புக்கிட் ரவாங் ஜெயாவில் நாய் குட்டி மடிந்து போனது தொடர்பில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அந்த வைரல் வீடியோவில் தெரிந்தது.
சாலையில் நாய் குட்டி சடலமாகக் கிடக்க, அதை சாகடித்ததாகக் கூறி தன்னை குற்றம் சாட்டியவர்களுடன் ஓர் ஆடவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அந்த 3 நிமிட வீடியோவில் காண முடிகிறது.