Latestமலேசியா

ரவாங்கில் Nutri Wellness முதல் கிளை திறப்பு; முழுமையான நலத்திற்கான பயணம்

ரவாங், ஜனவரி-6,

சுகாதார ஆரோக்கியப் பராமரிப்புப் பொருட்களை விற்கும் Nutrilavish நிறுவனம், புதிதாக அதன் முதல் கிளைக் கடையான Nutri Wellness-னை அண்மையில் ரவாங்கில் பிரமாண்டமாகத் திறந்தது.

Dr கலைச்செல்வியை நிறுவனராகவும், தலைமை செயலதிகாரியாகவும் கொண்ட இக்கடை, அங்குன் சிட்டி வர்த்தக மையத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது.

இதன் திறப்பு விழாவில் பிரபல மலாய்ப் பாடகி மார்ஷா மிலான் லொண்டோ மற்றும் Country Homes போலீஸ் தலைவர் ASP முர்சியானா கைய்ஸியா (MURZIANA QAYYSIA) சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

VIP-கள், Dr கலைச்செல்வியின் பெற்றோர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டினர்.

விற்பனைப் பிரிவு இயக்குநர் கண்மணி, விளம்பரப் பிரிவு இயக்குநர் Dr நாவுகரசன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

5 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கும் தமக்கு, முதல் கிளையைத் திறந்திருப்பதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாக Dr கலைச்செல்வி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

ஆரோக்கியம், அழகு மற்றும் நீண்டகால நலவாழ்வை மேம்படுத்தும் சிறப்பான தீர்வுகள் மூலம் மக்களை அவர்களின் நலவாழ்வு பயணத்தில் ஆதரிக்க இவர் உறுதிபூண்டுள்ளார்.

இவ்வேளையில், நல்லெண்ண சேவையிலிருந்து முழுமையாக நலத்திற்கான பயணத்தை Nutri Welness முன்னெடுத்துள்ளதாக Dr நாவுகரசன் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள், உணவுக் குறிப்புகள், சமூக சேவைகள் மூலம் தொடங்கிய கலைச்செல்வியின் இம்முயற்சி, 2021-ல் Nutrilavish என்ற பெயரில் வணிகமாக உருவானது.

XTRIMM, D4D, Femme Wash, Femme Boost போன்ற தயாரிப்புகளை, சமூகத்தின் தேவைக்கேற்ப அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Nutri Wellness வெளிப்புற மற்றும் வாழ்க்கை முறையை ஆதரிக்கும் நிலையில், அதன் முதன்மை வெளியீடான Nutrilavish உடல்நல ஊட்டச்சத்தை கவனிக்கிறது.

இதன் வழி, ஒரு நம்பகமான ஆரோக்கிய வர்த்த முத்திரையாக, நவீன வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப உயர்தர, அறிவியல் ஆதரவு சுகாதார தீர்வுகளை வழங்க இந்நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

குறிப்பாக வாடிக்கையாளர்களின் மாறிவரும் ஆரோக்கிய தேவைகளை பூர்த்திச் செய்வதில் இந்நிறுவனம் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!