
ரவாங் , பிப்ரவரி-25-இன்று அதிகாலை, சிலாங்கூர் ரவாங்கில் உள்ள உச்சிமலை முனீஸ்வரர் ஆலயம் இடிக்கப்பட்டது.
கோவில் நிர்வாகத்தினர், சிலைகள் மற்றும் புனிதப் பொருட்களை முன்கூட்டியே மாற்றியதால், இடிப்பு எந்தத் தடங்கலுமின்றி அமைதியாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து வெளியேற நில உரிமையாளரான Yayasan Kubra விதித்த 14 நாள் காலக்கெடு நேற்று நள்ளிரவு முடிவதற்கு முன், சிலைகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து விடியற்காலை 3 மணியளவில் போலீஸ் மேற்பார்வையில் தன்னார்வலர்களால் கோயில் இடிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது எந்த பிரச்னையோ சலசலப்போ ஏற்படவில்லை;
ஒப்புக் கொள்ளப்பட்ட படி வெளியேறியதன் மூலம் சட்டத்தை மதித்து கோவில் நிர்வாகத்தினர் செயல்பட்டுள்ளனர்; அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுவதாக, Yayasan Kubra பேச்சாளர் கூறியதாக மலேசியா கினி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்கோயில் உடைப்பு சம்பவ காணொலிகள் சமூக ஊடகத்தில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
கோயில் உள்ள இடத்தை பிப்ரவரி 23–ஆம் தேதிக்குள் காலி செய்யாவிட்டால் தம்மீது நில அத்துமீறல் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என கோம்பாக்கைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக இக்கோயிலின் செயற்குழு தலைவர் R.அறிந்திரன் நேற்று புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



