Latestமலேசியா

ரவாங் போக்குவரத்து சோதனையில் JPJ அதிகாரிகள் மீது பட்டாசு வீச்சு

ரவாங், பிப்ரவரி-23-சாலைப் போக்குவரத்து துறையான JPJ-வின் அமுலாக்க அதிகாரிகள், LATAR நெடுஞ்சாலை அருகே மேற்கொள்ளப்பட்ட சீனப் புத்தாண்டு சிறப்பு சோதனையின் போது பட்டாசு வீச்சுக்கு ஆளாகினர்.

பிப்ரவரி 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஜாலான் தாசேக் புத்ரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்திருந்தவரும் ஹெல்மட் அணியாததால் நிறுத்தப்பட்டனர்.

சோதனையில், வாகனமோட்டும் உரிமம் இல்லை, வாகன காப்பீடு இல்லை, காலாவதியான சாலை வரி என பல குற்றங்கள் கண்டறியப்பட்டன.

இருவருக்கும் அதிகாரிகள் அபராதம் விதிக்கும் போது, 20–30 பேர் கொண்ட மோட்டார் சைக்கிள் கும்பலொன்று அருகிலுள்ள மலைப்பகுதியிலிருந்து பட்டாசுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதோடு, தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டும், வேண்டுமென்றே மோட்டார் சைக்கிளின் exhausts சத்தத்தை வேகமாகவும் எழுப்பி தொந்தரவு செய்தனர்.

பாதுகாப்புக் கருதி JPJ அதிகாரிகள் சோதனையை முடித்துகொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிலாங்கூர் JPJ தலைவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!