
ஜெய்ப்பூர், ஜனவரி-7,
இந்தியா, ராஜஸ்தானில் யாருமில்லாத ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன், exhaust விசிறி ஓட்டைக்குள் சிக்கிக் கொண்ட விநோத சம்பவம் வைரலாகியுள்ளது.
முதல் நாள் இரவு வீட்டைப் பூட்டி விட்டு கணவரோடு கோயில் சென்ற மாது, விடியற்காலை வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்கம் சந்தேகப்படும்படியான ஒன்றை கண்டார்.
சென்று பார்த்தால், சமையலறையின் சுவரில் உள்ள exhaust விசிறியின் ஓட்டையில் ஓர் ஆடவரின் பாதி உடல் தொங்கிக் கொண்டிருந்தது.
அதிர்ந்து போய் அண்டை வீட்டாரிடம் அவர் தகவல் சொல்ல, சிறிது நேரத்தில் போலீஸாரும் வந்து சேர்ந்தனர்.
முன்னும் பின்னும் செல்ல முடியாமல் ஓட்டைக்குள் சிக்கிய நிலையில், உள்ளூர் மக்களும் போலீஸார் சேர்ந்து திருடனை மீட்டனர்.
பின்னர் அவனைக் கைதுச் செய்து கொண்டுச் சென்றனர்.
திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் அவனுடன் வீடு புகுந்த கூட்டாளி முன்கூட்டியே தப்பியோடி விட்டான்;
அவனுக்கு எதிராக தேடுதல் வேட்டைத் தொடங்கியுள்ளது.
இச்சம்பவம் வீடியோவாக வைரலாகி, சமூக ஊடகங்களில் சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



